search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்ச்சை கருத்து"

    பிரதமர் மோடி குறித்து பஞ்சாப் மாநில மந்திரியும், காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளருமான நவ்ஜோத் சிங் சித்து மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
    இந்தூர்:

    பஞ்சாப் மாநில மந்திரியும், காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளருமான நவ்ஜோத் சிங் சித்து மத்திய பிரதேசத்தில் கடந்த மாதம் 29-ந்தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக பா.ஜ.க. தரப்பில் தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தேர்தல் கமிஷன் அவரது பேச்சுக்கு விளக்கம் கேட்டு, 24 மணி நேரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என சித்துவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இந்தநிலையில் இந்தூரில் நேற்று சித்து அளித்த பேட்டியில், திருமணம் முடிந்ததும் மணப்பெண் தன்னை மற்றவர்கள் உற்று நோக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கை வளையலை குலுக்கி சைகை செய்வார்.

    அதுபோல பிரதமரும் தனது பேச்சை மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்பதுபோல பேசி வருகிறார் என்று மீண்டும் பிரதமர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
    ராகுல் காந்தி குறித்து குஜராத் மந்திரி மந்திரி கன்பத் கூறிய கருத்து காங்கிரஸ் மத்தியில் சர்ச்சையையும், எதிர்ப்பையும் கிளப்பி இருக்கிறது.
    ஆமதாபாத்:

    குஜராத் மாநில பா.ஜனதா மந்திரி கன்பத் வசவா நேற்று சூரத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது, ராகுல் காந்தியை சிவனின் அவதாரம் என காங்கிரசார் அழைப்பதை கிண்டல் செய்து பேசினார்.

    இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘ராகுல் காந்தி சிவனின் ஒரு அவதாரம் என காங்கிரசார் கூறுகிறார்கள். மக்களை காப்பாற்ற சிவன் விஷம் அருந்தினார். அதைப்போல காங்கிரசாரும், ராகுல் காந்தியை ½ லிட்டர் (500 மில்லி) விஷம் அருந்தச்செய்ய வேண்டும். அதில் அவர் உயிரோடு இருந்தால், ராகுல் காந்தி உண்மையிலேயே சிவனின் அவதாரம்தான் என நாங்கள் நம்புகிறோம்’ என்று கூறினார்.



    இது சர்ச்சையையும், எதிர்ப்பையும் கிளப்பி இருக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ராகுல் காந்தி பற்றிய இந்த கருத்து துரதிர்ஷ்டவசமானது என்று கூறிய குஜராத் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ் தோஷி, இது பா.ஜனதாவின் உண்மையான குணநலன்களை காட்டுவதாகவும் தெரிவித்தார்.
    பெண் கற்பழிப்பு தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த ஒடிசா விவசாய மந்திரி பிரதீப் மகாரதி நேற்று தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். #Odisha #AgricultureMinister #PradeepMaharathy #Resign
    புவனேஷ்வர்:

    கடந்த 2011-ம் ஆண்டு ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் பெண் ஒருவர், மர்ம கும்பலால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு இறந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்து சமீபத்தில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    இது பற்றி கருத்து தெரிவித்த ஒடிசா விவசாய மந்திரி பிரதீப் மகாரதி, கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்பதாக கூறினார். இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து, அவர் மந்திரி பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த எதிர்ப்பின் காரணமாக ஏற்பட்ட நெருக்கடியால், பிரதீப் மகாரதி நேற்று தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அலுவலகத்திற்கு அவர் அனுப்பி வைத்தார்.  #Odisha #AgricultureMinister #PradeepMaharathy #Resign 
    நான் ஒரு மந்திரி, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு பாதிப்பு இல்லை என சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மத்திய மந்திரி ராம்தாஸ் அதவாலே வருத்தம் தெரிவித்தார். #FuelPriceHike #RamdasAthawale
    மும்பை:

    நாடு முழுவதும் தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல். டீசல் விலை குறித்து மத்திய மந்திரி ராம்தாஸ் அதவாலே, ‘நான் ஒரு மந்திரி. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு பாதிப்பு இல்லை. மந்திரி பதவியை இழந்தால் நான் விலைஉயர்வால் பாதிக்கப்படலாம்’ என்று நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். மந்திரியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து ராம்தாஸ் அதவாலே நேற்று வருத்தம் தெரிவித்தார். இதுதொடர்பாக மும்பையில் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘பெட்ரோல், டீசல் விலைஉயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உணர்வுகளை நான் அறிவேன். சாமானிய மக்களை காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை’ என்று கூறியுள்ளார்.  #RamdasAthawale #UnionMinister
    ×